Pages

வாசகர் வட்டம்

Wednesday, August 22, 2012

இவனும் ஒரு மேடை பேச்சாளன் -மிதுவின் சிறுகதை


ஊர் இப்ப தோரணங்கள் கொடிகள் சுவரொட்டிகள் உடன் தன்னை அலங்கரித்து தேர்தல் திருவிழாவுக்கு ஆயத்தமாகி கொண்டிருந்தது.இது வழமையான தேர்தல் அல்ல .ஆண்ட பரம்பரை மீள ஆள நினைப்பதில் தவறு என்ன என்ற இறுக்கமான கோசத்துடன் கிளம்பிய தேர்தல் .இதனால் ஊர் சனம் மட்டுமின்றி ஏதோ திருடனை பிடிக்க போகின்றது போல் அவசரத்தில் போலிஸ் ஜீப்பில் அங்கும் இங்கும் திரிகின்ற பொலிஸ்காரமும் கூட உணர்ச்சி பிளம்பில் மிதந்து கொண்டிருந்தனர்.குறிப்பிட்ட அனுமதிக்க பட்ட நேரத்தில் மேடை அமைத்து வீராவசத்துடன் அவர்கள் பேச சனமும் உணர்ச்சி பிளம்பாக தகிப்பார்கள்.உணர்ச்சி பிளம்பாக இரவு வீடு சென்று படுத்து நாடு கிடைத்த கனவில் மூழ்கி விடிய எழும்பி வேதனை தரும் தலைப்பு செய்தியை பத்திரிகைகளில் படிப்பார்கள்.


இவன் ஒருவன் எந்த விதமான மேடை அலங்காரமின்றி பட்ட பகலில் சுடும் வெய்யிலில் புல் தரை முன்பாக உள்ள உயரமான கல் மதில் குத்தி ஒன்றிலிருந்து காட்டமாக பேசி கொண்டிருக்கிறான் . நீண்ட நேரம் பேசி இருப்பான் போலும் . பேசியதை முடித்து விட்டு சில நேரம் அவகாசம் எடுத்து விட்டு புதிய தொனியில் புதிய விசயத்தை சொல்ல தொடங்குகிறான்.


இவ்வளவு நேரமும் எனது அரசியல் ஞானம் கலந்த பேச்சை கேட்டு கண்டுண்டவர் போல மெளனமாக இருக்கும் உங்களின் ஆர்வம் புரிகிறது. எனக்கு எப்படி இந்த அரசியல் சாணக்கியம் கிடைத்தது என்ற கதை சுவராசியமானது.யாருக்கும் சொல்லாதாது இது .இன்று சொல்லுகிறேன் உங்களுக்கு.

இந்த ஊரை தாண்டி இருக்கும் வல்லிபுரக்கோவில் அதன் தொடர்ச்சியாக இருக்கின்ற மணல் திட்டுக்கள் உடன் நீண்ட பாலை வனம் போல இருக்கின்ற பகுதி ,பொட்டல் காடு நீண்ட கால பயிரிடப்படாத வயல்கள் உங்களுக்கு தெரிந்தவை ..இவற்றை தெரியாதவர்கள் இவ்வூர் வாசிகளாக நிச்சயமாக இருக்க மாட்டீர்கள் .,..இந்த பகுதியில் பெரிய ஒரு அரச இராச்சியத்தின் தலை நகரம் இருந்தது என்று தெரியாதவர்கள் ..எழுத்து கூட்டி வாசிக்க முடியாதவர்கள் தான் அப்படி இருப்பீர்கள்..

திருவிழா காலம் அல்லது ஏதும் விசேசமான நாட்களில் தான் அப்பகுதிக்கு சென்று இருப்பீர்கள் , நான் இந்த நாட்கள் தவிர்ந்த நாட்களிலும் உலாவுவதுண்டு .இந்த பிரதேசத்தின் தனிமை அமைதி ஏகாந்தம் நடுநிசி இரவு நேரத்தில் கூட இருக்காது
ஆக்களுடன் வாழும் போது முட்டி மோதலினால் ஏற்படும் மன இறுக்கத்தை தவிர்க்க அடிக்கடி இங்கு செல்வதுண்டு.

அப்பகுதியிலிருந்து ஊரை பார்க்கும் போது ஊர் மூச்சு முட்டி தவித்து கொண்டிருப்பது போல் மாதிரியான உணர்வு ஏற்படும் . தூரத்தில் தெரியும் மணல் திட்டுகளை தாண்டி வானத்தை தொட்டு கொண்டிருக்கின்ற சாடையாக நீலமாக தெரிகின்ற கடல் தெரியும் . காற்றின் வீச்சின் ஏற்ற தாழ்வுக்கு ஏற்ப கடல் அலை எழுப்பும் சத்தம் அப்ப அப்ப கேட்டும் கேட்காமால் போகும் .தூரத்தில் சில கட்டாகாலி மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்.எப்பாவது இருந்து அந்த பிரதேசத்தின் அண்டிய றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கும் சிலவேளை அதுவும் கேட்காது.

அந்த பிரதேசத்தில் உலாவும் போது நானே அவற்றுக்கு எல்லாம் ராஜா மந்திரி என்று நினைத்து கொள்ளும் போது ஒரு நாள் நீண்ட சடை முடி தாடியுடன் அமைந்த சாமியார் போன்ற தோற்றமுடைய ஒருவர் அந்த பொட்டல் காட்டில் உள்ள கொடி செடிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் .சில வேளை கேள்வி கேட்பவர் மாதிரி இருக்கும் . சிலவேளை பதில் சொல்லுகிறவர் மாதிரி இருக்கும்.ஏதோ பைத்தியமாய் இருக்கும் என்று நினைத்து கொண்டு அவரை தாண்டும் போது மெளனமாக செல்வேன் . அவரும் அத்தருணத்தில் என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு செடி கொடியுடன் பேசுவதை நிறுத்தி விட்டு மெளனமாகி விடுவார்.இப்படி மெளன அறிமுக பரிமாற்றம் இருவரிடமும் பல காலமாக நடந்தேறியது.

.ஒரு முறை இப்படி இவரை தாண்டி செல்லும் போது மகனே என்று அசரீரி போல் என அழைத்து நிறுத்தி என்னுடன் பேச்சு கொடுக்க தொடங்கினார் . நானும் மிக பயத்துடனும் பவ்வியத்துடனும் அளவிளாவா தயாரானேன்.உன்னை ப்பார்த்தால் படித்தவன் போல் தோன்றுகிறது ...இந்த செடி பற்றி தெரியுமா என கேட்டார் .வாயை கொடுத்து வம்பை வளப்பான் என நினைத்து கொண்டு பதில் கொடுக்க வாயை திறந்த வாயை மறுத்தான் கொடுத்து மூடி கொண்டேன்.என்னிடம் எதுவும் நீண்ட நேரம் பதில் வராத நிலையில் இவ்வளவு காலமும் எனக்கு சொல்ல இருந்ததை மெளனத்துக்குள் வைத்து விட்டு இப்ப எல்லாம் சேர்த்து வைத்ததை சொன்ன மாதிரி மடை திறந்த வெள்ளம் போல கொட்ட தொடங்கி விட்டார்.

இந்த செடியை பற்றி யாருக்கும் சொல்லுவதில்லை ..அதை தெரிந்து கொள்ளுவதுக்கு உனக்கு இந்த அதிர்ஸ்டம் கிடைத்திருக்கிறது ..இந்த செடியின் விதை இருக்கிறதே உன்னால் காலத்தை வைத்து கணிக்க முடியாத வயதை உடையது .சில காலங்களில் தான் இது தோன்றும் சில காலங்களில் மண்ணில் அடி யில் உறங்கு நிலையில் இருக்கும் ..இது தோன்றும் பொழுது எனக்கு இருக்கும் அனுமாஷ்ய சக்தியினால் அறிந்து இங்கு வந்து இதனுடன் வந்து பேச்சு கொடுப்பேன் .இதன் தாவர பெயர் இது . இதன் தாவரபெயரின் சூத்திரம் இது என்று அடுக்கி கொண்டு சொல்லிக்கொண்டு போனார் .பைத்தியம் போல் இருக்கும் இந்த சாமியாரிடம் அஞ்ஞானம் மட்டுமல்ல விஞ்ஞானம் தெரிந்து இருக்கிறதே என்று அதிர்ச்சியுற்றாலும் அவர் கூறிய அந்த செடி காஞ்சிரோண்டி வகை செடி .அதன் இலையை எடுத்து சிறு வயதில் யாருக்கும் விளையாட்டுக்கு தேய்த்து விடுவதுண்டு . அப்படி தேய்த்ததனால் ஏற்படும் எரிச்சல் கடி அடங்க நீண்ட நேரம் எடுக்கும் ...
அதனால் நம்பிக்கையற்று அவரை முழு பைத்தியமே என்னுள் தீர்மானித்து கொண்டு எவ்வளவு விரைவாக அவ்விடத்தை விட்டு அகல முடியமோ அவ்வளவு விரைவாக அகன்று விட்டேன்.


எப்பவும் போல அப்பப்ப அங்கு உலாவுவேன் .ஆனால் அந்த சாமியரை இப்ப கன காலம் காணவில்லை.எங்கு சென்றார் என்று என்னுள் ஒரு ஏக்கம் இருக்கும்..சிலவேளை அவரின் அசரீரி குரல் அங்கு கேட்பது போல் எனக்கு பிரமை தோன்றும் .சில வேளை திரும்பியே பார்த்து விடுவேன் .ஒன்றுமே இருக்காது அவ் விடத்தில் வெறும் கட்டாக்காலி மாடுகள் தான் மேய்ந்து கொண்டிருக்கும் .அவர் கதைக்கும் அந்த காய்ஞ்சோண்டி மரச்செடியை கூட காணவில்லை .அதை சூழ பல புதர் செடிகள் முளைத்து விட்டன.ஒரு நாள் பெளணர்மி அன்று அவ்விடத்தில் உலாவும் போது அந்த செடி தெரிந்தது .என்னையறியாமால் அதை நோக்கி சென்றேன். அது தீடிரென்று அரையளவுக்கு உயர்ந்தமாதிரி இருந்தது .அதன் இரு பக்கமும் கிளைத்து நிற்க்கும் இலைகள் கைகள் போல மாறி என்னை நோக்கி வா வா என்று அழைப்பது போல் இருந்தது .அதில் ஒரு இலை குத்தன கிளம்பி மேல் பக்கம் அசைந்து தலை போல காட்சி அளித்தது.இலையின் நடுவிலுள்ள காம்பு திறந்து மூடியது வாய் விட்டு சிரிப்பது போல் இருந்தது .நல்ல நிலவு காய்ந்து கொண்டிருந்தது .என்னை அறியாமால் எனக்குள் ஒரு ஆனந்தம் ஏன் என்று தெரியவில்லை .எனக்கு தீடிரென்று தொடவேண்டும் என்று உணர்வு .உடனே அருகில் போய் இலையை வருடினேன்.

அப்போது தீடிரென்று சத்தம் மட்டும் தான் கேட்டது எனது உடல் கால் பகுதியில் தொடங்கி மெல்ல மெல்ல அருவமாக மாறி கொண்டிருந்தது.அதே நேரம் அந்த பிரதேசத்தின் சீதோஸ்ண நிலை மாறியது .தீடிரென்று ஒரு வித மணம் வீசியது .நாங்கள் சொல்லும் நறுமணத்துக்கு மேலான அந்த நேரத்தில் மட்டுமே உணரக்கூடியதான வாழ் நாளில் நான் நுகர்ந்திராத ஆனந்தம் தரக்கூடிய மணமாய் இருந்தது .. கோட்டைகள் கொத்தளங்கள் ,குதிரை தடம் தெரியும் பெரும் வீதிகளுடன் அங்கங்கு நெருப்பு பந்தங்கள் எங்கள் உலகத்து மேர்க்கூரி வெளிச்சத்தின் மேலான வெளிச்ச செலுத்தி கொண்டிருக்கின்ற இடமாக மாறி கொண்டிருந்தது. ..என்னில் எல்லா உணர்ச்சிகளும் இருக்கின்றன ஆனால் ..நானோ அருவமான நிலையில்

அங்கு ஆவி போல அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தேன் ..தீடிரென்று ஒரு வித நக்கல் சிரிப்புடன் ஒரு குரல் கேட்டது . மகனே நீ இங்கு வருவாய் எனக்கு தெரியும் என்ற படி ...கேட்ட குரலாக இருக்கிறதே திரும்பி பார்த்தால் அந்த சாமியார் தான். ஆனால் வித்தியாசமாய் இருந்தார் .கொஞ்சம் இளமை ததும்பினதுமாக இருந்தார்
உடை அலங்காரமும் தலை அலங்கராமும் வித்தியாசமாய் இருந்தார் ,சிரிக்கும் போது தெரியும் பற்களின் அமைப்பும் மட்டும மாற வில்லை.

வா மகனே நல்ல நேரத்தில் தான் இங்கு வந்திருக்கிறாய் .. எங்கு நிற்கிறாய் தெரியுமா? நீ காலத்தை கடந்து
இறந்த காலத்துக்கு வந்திருக்கிறாய்

.உன்னுடைய சரித்திர ஆசிரியர்கள் சொல்லி தந்து போல் இங்கு இல்லை என இங்கு இருக்கும் சிறிது நேரத்தில் உணர்வாய் ..

.அவரே பேசி கொண்டு இருந்தார் .

அதோ பார் வெள்ளை இனத்தவரும் கடும் கறுத்த இனத்தவரும் சப்பை மூக்கு உடைய அமைப்புடையோரும் மிக கட்டை இனத்தவரும் அந்த பாய் மரக் கப்பலில் வந்து கரை ஏறி
கொண்டிருக்கிறார்களே ஏன் தெரியுமா?

.இந்த நாட்டின் அரசியல் பொருளாதார விற்பன்னர்கள் சேர்ந்து இன்று மாலை கருத்தரங்கு வைக்கிறார்கள் அதை கேட்க தான் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்

அந்த அரசியல் கருத்தரங்கத்தில் அருவமாக நான் . அவர்களின் உரை விளங்குவது கஸ்டமாக இருந்தது. நாம் பேசும் தமிழாக இல்லாமால் கமா ,கேள்விக்குறி முற்று புள்ளியுடன் இருக்கும் எழுத்து தமிழ் போல இருந்தது ..ஆரம்பத்தில் கஸ்டமாக இருந்தது ..பிறகு இலகுவாக எனது மூளை யின் தினுசுக்களுக்களுள் அந்த உரைகள் அத்தியாயங்களாக மாறி நீண்ட பக்கங்களுடன் பெரிய புத்தகமாகவே சேமிக்க பட்டன.எனக்கு என்னவோ இந்த அரசியல் அறிவை எல்லாம் உடனடியாக எனது காலத்துக்கு சென்று பிரயோகிக்கவேண்டும் போல் இருந்தது.
கெஞ்சிய குரலில் கேட்டேன் எப்படி எனது காலத்துக்கு செல்லுவதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று சாமியாரை நோக்கி ...சாமியார் மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு இயல் நிலையை கடந்து காலம் கடந்து வந்தவர் திரும்பி சென்றது நடந்ததில்லை அது பல சிக்கல்களை தரும் என்பதால்.

எது எப்படியோ நான் அபாயத்தை எதிர் கொண்டு உனக்கு திரும்பி செல்லுகின்ற இரகசியத்தை சொல்லி தருகிறேன் அதன் படி செய் என்றார்.

அதோ குளம் மாதிரி தெரிகிறதே அதன் அருகில் இருக்கும் அருகில் இருக்கும் மரத்தில் பழம் மாதிரி இருக்கிறதை கடித்து துப்பு காலம் கடந்து செல்வாய் என்றார் .அவசரமாய் ஓடி அவர் சொன்னது போல செய்தேன் ..இப்ப அந்த பொட்டல் வெளியில் நான் மெல்ல மெல்ல தலையிலிருந்து காலை நோக்கி அருவத்திலிருந்து உருவமாக மாறி கொண்டு அரை நினைவுடன் மயங்கி இருக்கிறேன் . தூரத்தில் றோட்டில் வான் பஸ் போகும் சத்தம் கேட்கிறது.

இவன் இங்கு நீட்டி முழுங்கி முழு அரசியல்வாதி மாதிரி பேசி கொண்டிருப்பதை பார்த்த றோட்டால் போன இவனது உறவுக்கார வயது போன மனிசி தன்னுக்குள் புலம்பி கொண்டு சென்றது...என்ன படிச்ச பொடியன்  இப்படி பைத்தியகாரனாய் மாறி தன் நிலை தெரியாமால் பேசி கொண்டு திரியுது .என்ன இருந்தாலும் அவரவர் விதியை மார்த்த முடியுமே என்றபடி

இவன் இப்பவும் தொடர்ந்து பேசி கொண்டிருக்கிறான் .ஆனால் ஒரு வித்தியாசம். இவன் பேசி கொண்டிருக்கும் கல் அத்திவார மேடைக்கு முன்னுள்ள புல் வெளியில் இவ்வளவு நேரமும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சிதறி வேறு பக்கம் பார்த்து கொண்டு மேய்ந்து கொண்டிருக்கின்றன

Tuesday, July 17, 2012

மிதுவின் சிறுகதை -எது நிஜம் ?

எது நிஜம்?(சிறுகதை


இரவு நேர புழுக்கம் நித்திரையை தாலாட்டாமால் எழுப்பியது.இப்படி கொஞ்சநாளாக ..கொஞ்ச காலமாக ஏதோ எனக்கு வந்து கதை சொல்லுவது போல பிரமை .அதுவும் மற்ற நேரம் காலம் இல்லாது இரவு பன்னிரண்டு மணி அடித்து முடிந்த கையோடை தொடங்கி விடும்.காலில் இருந்து உடம்பில் வழியாக ஊர்ந்து வந்து தலை வழி ஏறி பிடரி பக்கம் சென்று இனம் புரியாத சங்கீத மொழியில் ஏதோ சொல்ல தொடங்கி விடும்.

இதோ தொடங்கி விட்டது.அக்கம் பக்கம் என்னையறியாமால் புரள்கிறேன் ,கவிழ்கிறேன் நிமிர்கிறேன் பிறகு படுக்கிறேன்..தலையை ஆட்டுகிறேன்.பிறகு புரள்கிறேன்..ஏதோ றிமோட் கருவியினால் யாரோ இயக்க அவர்களின் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது போல் நிறைவேற்றி கொண்டிருக்கிறேன். எனக்கே ஆச்சரியமாய் இருக்கிறது .நான் செய்து கொண்டிருப்பதை நானே மூன்றாம் ஆள் பார்ப்பது போல் பார்க்கிறேன்.சிரிப்பாக இருக்கிறது மறுபுறம் நம்ப முடியாமால் இருக்கிறது..கனவோ என நுள்ளி பார்க்கிறேன் ..

.இல்லை..மறுபுறத்தில்...வாயால் மூக்கால் மூச்சின் வேகத்தை மாற்றி கூட்டி குறைத்து .ராகலாபனை செய்து இதமான தூக்கத்தை அனுபவித்து வீட்டில் உள்ளவர்கள் தூங்கி கொண்டிருக்கிறார்கள்...இந்த நிஜம் தான் இது கனவல்ல நிஜம் தான் என்று நினைக்க வைத்து கொண்டிருக்கிறது. அஜீரண கோளாறால் ஏற்படும் வினையா என்று ஏப்பம் விட்டு பார்க்கிறேன். அது திரும்ப வந்து காலினூடாக வந்து வயிற்று பாகத்தினூடாக வந்து பிடரியில் ஏறுகிறது.கம்பியூட்டரில் தெரியும் அலை வரிசை மாதிரி ஏற்றம் இறக்கத்துடன் ஒலி ஒளிக்கீற்றை கக்கிக்கொண்டு பிடரி மண்டையில் ஏறி கொண்டிருப்பது தெரிகிறது.அந்த ஏப்பம் வேறு விதமான வினோத ஒலியாக மாற்றி படுக்கையை விட்டு எழுப்பி நகர கட்டளை இடுகிறது. நானும் ..எல்லாம் சொல்லி வைத்தால் போல் அது சொல்வதை செய்கிறேன்...மறுக்க விரும்பனாலும் மறுக்க முடியாமால்....செய்து கொண்டிருக்கிறேன்..

ஏன் இப்படி? மீண்டும் கனவா என்று சந்தேகம் கொள்கிறேன் வீட்டுக்கு வெளியே உள்ள மாமரத்தின் உச்சத்தில் வழமையாக தூக்கம் போடும் சாமக்கோழி ஒன்ற..கொக்கரக்கோ என்று மூன்று முறை கூவி இது நிஜம் தான் என்று அறிவுறுத்துகிறது.இந்த கோழி என்ன நிஜத்தை அறிவுறுத்துகிறது எனக்கு?..நான் என்ன முட்டாள் பேர்வழியா? இல்லையே..

.. நான் இந்த ஊருக்கு அண்மையில் மாற்றாலாகி வந்த ஒரு அதிகாரி என்பது நிஜம் . நான் சொல்வதை தலையால் சுமந்து செய்ய காத்திருப்பவர்கள் பலர் இருப்பதை பகலில் எனது அலுவலகத்துக்கு வந்து பார்த்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்து இருக்கும். காலையில் அவள் ஒருத்தி வந்து என்னமாய் சாகசம் மாயாலாலம் பண்ணினாள் தனது அலுவலை இலகுவாக என் மூலம் விரைவில் முடிப்பதற்க்கு.எப்படி சிரிக்க சிரிக்க பேசி என்னிடம் நெளிந்தாள் ...உண்மையில் அவள் பார்ப்பதற்க்கு உந்த கோயிலுள்ள பெண் விக்கிரத்துக்கு ஆடை அலங்காரம் செய்தவள் மாதிரி இருந்தாளே ..அவளின் சாகசத்துக்கு எல்லாம் மசிந்தேனா நான்...

என்னை ஏதோ செய்து விடுவள் போல அல்லவா ..நடந்து கொண்டாள்..நானோ எந்த வித கலை ரசனை இல்லாத கல் போன்றவன் போன்றல்லவா நடந்து கொண்டேன். அவளை காவலாளியை அழைத்து நாயை துரத்துவது போல் அல்லவா துரத்தி விட்டேன். அப்பொழுது கூட அவள் போகும் என்னை திரும்பி பார்த்த பார்வை இருக்கிறதே ...அதுவும் எவனையும் சுண்டி இழுக்க கூடிய காந்த பார்வை அல்லவா

அந்த பார்வை கண்ணில் இப்பொழுதும் கருவிழிகளில் நடமாடுகிறது இதோ நானே பார்க்கின்றேனே..பிரமை இல்லை உண்மையே என எனக்கு பட்டு கொண்டே இருக்கிறதே.இதோ சகதர்மணியின் குறட்டை சத்தம் கேட்கிறதே அதன் மூலம் ...இது நிஜம் என மீண்டும் பிறடியின் ஒரு பாகத்தில் வந்து உணர்த்தி கொண்டிருக்கிறதே.

என் கண்களில் இருப்பதை அவள் எழும்பி கண்டு விடுவாளே என அச்சமும் என்னுள் வந்து போகிறது. கண் அசைவை அந்த யன்னல் வழியாக விட்டு எனது கருவிழிகளில் நடமாடுவதை வெளியே அகற்ற முயல்கிறேன்.அந்த முயற்ச்சிக்கு பிடரியில் இப்பொழுது வந்து கதை சொல்லும் சங்கீத மொழி வந்து ஆணையிட்டு உதவி செய்கிறது

யன்னலுக்கு வெளியே ....அந்த இருளை கிழித்து மங்கிய நிலா வெளிச்சம் பொழிந்து கொண்டு இருக்கிறது...தூரத்தில் தெரியும் பனம் கூடல் வரையும் ஒரு பாதை போய் கொண்டிருக்கிறது ...அதற்க்கு அங்கால் எங்கு போகிறது ..யாருக்கும் தெரியும்...இந்த அரசாங்க பங்களாவுக்கு வந்து தங்கி எண்ணி கொள்ளும் நாட்கள் தானே.ஆகிறது..யாரோ சொன்னார்கள் ...சவக்காலையில் முடிகிறது என்றது காலையில் வாட்ச்மென் சொன்ன மாதிரி ஞாபகம் .அது நிஜமோ என்று தெரியாது.

அந்த ஒற்றையடி பாதையில் நின்று என்னை அழைக்கிறாள் ...பலத்த சத்ததத்துடன் அழைக்கிறாள் ..எனது காது அடைத்து விடும் மாதிரி இருக்கிறது.இந்த சத்தத்திலும் தூக்கம் கெடாமால் அதே ராக ஆலோபனையுடன் மற்றவர்கள் தூங்கி கொண்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது..அவள் மீண்டும் கட்டளை இடுவது போல அழைக்கிறாள்...இம்முறை அவளை தவற விடு கூடாது என நினைத்து கொள்ளுகிறேன் ,,எனது பிடரியில் இப்ப வந்து தொந்தரவு செய்து கொண்டிருக்கும் அதுவும் அந்த கட்டளையை ஏற்று கொண்டு நடக்க சொல்லுகிறது....

யாருக்கும் தெரியாமால் பூனை அடி எடுத்தது போல் எடுத்து வர முயற்ச்சிக்கிறேன் ...அந்த அடி நிலத்தில் முட்டாமால் நகர்கிறது ...அவள் பின்னால் நகர்ந்து கொண்டிருக்கிறேன் ,,,பனங்கூடல் தாண்ட மறைந்து விட்டாள்...பிறகு தெரிவாள்...மறைவாள்....அவளை தேடி .எவ்வளவு தூரம் நடந்தேனோ தெரியவில்லை.....நடந்து கொண்டிருந்தேன்

இப்பொழுது யாரோ பாறாங்கல்லால் அடித்து விட்ட மாதிரி பிடரியில் வலி ...தலையை தடவி பார்க்கிறேன் . இரத்தம் கசிந்து கொண்டிருக்கிறது . மெல்லிதாக கண்ணை விழித்து பார்க்க முயற்சிக்கிறேன்,, ஒரு கட்டாந்தரையில் படுத்திருக்கிறேன்...விடிந்து விட்டது தூரத்தில் ஒரு பைத்தியக்கார தோற்றத்துடன் நிற்கும் பிச்சைக்காரி என்னை திட்டி கொண்டு இருந்தாள்

என்னை பற்றி என்ன நினைச்சே ...என்று தொடங்கி பேசி ஏதோ ஏதோ பேசி கொண்டிருந்தாள்

கண்ணை கிறக்கியது வலி தாங்கமால் துடித்து கிடந்த இடத்தில் மீண்டும் விழுந்து கிடந்தேன்

இப்ப மேலும் சில குரல்கள் கேட்டன

இவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்து கொண்டு ஒரு பிச்சைக்காரிக்கு பின்னாலை போய் தொந்தரவு செய்து இருக்கிறானே என்றது ஒரு குரல்

இவ்வளவு பெரிய ஆளாய் இருந்து கொண்டு இவ்வளவு சீப்பாய் நடந்து கொண்டிருக்கிறானே என்றது மற்ற ஒரு குரல்

இவனை எல்லாம் இந்த சுடலையிலை வைத்தே சாம்பலாக்கி போட்டு போக வேண்டும் என்று சொன்னது இன்னொரு கடுமையான குரல்

விட்டுடுங்க...ஜயாவுக்கு கொஞ்ச காலமாக நித்திரையில் நடக்கிற வியாதி இருக்கிறது .இரவு ஆனால் தூக்க கலக்கத்தில் நடக்க தொடங்கி விடுவார் .. ..அப்ப ஒன்றுமே தெரியாது.ஜயாவுக்கு..என்று கெஞ்சியது எனக்கு பழக்க பட்ட குரல் ஒன்று

அந்த கணத்தில் தான் முதன் முதலாக எது நிஜம் என்று எனக்கு தெரிந்தது

Monday, July 16, 2012

மிதுவின் சிறுகதை -வீடு இல்லாதவன்

வீடு இல்லாதவன்(சிறுகதை)

 

என்னத்துக்கோ என்று தெரியாமால் முட்டி மோதி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் நிலக்கீழ் சுரங்க நிலைய பாதையின் ஒரு மூலையில் எந்த வித சலனமுற்று தூங்கி கொண்டிருந்தான் ஒருவன்.பலர் இப்படி அங்கும் இங்கும் தெருவோர பாதைகளில் தூங்குவது ஒரு காலத்தில் சூரியன் மறையாத ராஜ்யம் வைத்திருந்தவர்களின் தலை நகரத்திலும் இப்ப சகஜம் என்றாலும்.எனக்கு அவன் ஒருவிதத்தில் பரிச்சயமானவன்.

இதே பாதையில் இதே அவசரத்துடன் இதே பட படப்புடன் கடந்த பத்து வருடங்களாக யாருடையதோ பண மூட்டையை நிமிர்த்தி வைக்க சென்று வருகின்றேன் .அவர்கள் தூக்கி எறியும் அற்ப சொற்ப பணத்துக்காக.இப்படி சென்று திரும்பு வழியில் தான் அவன் என் கண்ணில் தென்பட்டான்.

குளிர்காலம் என்றால் என்ன கோடைகாலம் என்றால் என்ன அவனது உடை ஒரே மாதிரி தான் .அவனது சவரம் செய்யப் படாதா முகமும் கத்தரிக்கோல் கண்டு பல யுகமாய் இருக்கும் என்று நினைக்க வைக்கும் தலை மயிரும் வயது போனவன் போன்று தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு தோற்றமளிக்கும்.அவனை அண்மிக்கும் போது எதையும் யாசிக்காத கூர்மையான பார்வையும் அர்த்தமில்லாத மென் சிரிப்பும் மிளிரும். .அத்தருணத்தில் இளமையின் இளம் கதிர்கள் சிதறி நிற்ப்பதை காணலாம்

இவனை முதன் முதலாக கண்டேன் எப்பவென்றால். பல வருடங்கள் முன்பும் இதே அவசரத்துடன் சென்று கொண்டிருக்கும் பொழுது தன்னை மறந்த நிலையில் கிட்டார் வாசித்து கொண்டிருந்தான்.அவன் முன்னால் பெரிய துணி ஒன்று விரித்து கிடந்தது ..அதில் அங்கும் இங்கும் நாணயங்கள் சிதறி கிடந்தன.நாணயத்திற்க்காக நாணயாமாய் நடித்து
பாடுபவன் போல் தோன்றாது.அவன் தன்னை மறந்து தான் பாடி தான் ரசித்து வாசித்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றும்.அந்த அவசரத்தில் செல்லும் அவசரக்காரர்களுக்கு கூட அங்கு அவன் மூலம் வரும் இசையினால் அவனை தாண்டி செல்லும் அந்த சிறு கணத்தில் மகிழ்வை கொடுத்திருக்க கூடும் .ஏனென்றால் அவனை திரும்பி பாராமல் சென்றவர்கள் குறைவு என்று சொல்லலாம் அந்த நகரும் கூட்டத்தில்

.

சில நேரத்தில் எதுவும் செய்யாமால் சும்மா வெறித்து பார்த்தபடி அந்த தூணில் சாய்ந்தபடி இருப்பான் .அடிக்கடி காச்சல் தடிமன் வருத்தம் மனிதர்களுக்கு மட்டுமன்றி .இந்த ரயில்களுக்கும் ஏற்படும்,காய்ச்சல் அளவை தெரிவுக்கும் வெப்பமானி போல் தாமத கால அளவுகளை நிலைய ஒலிபெருக்கி தெரிவுக்கும்..அந்த சிறு கால தருணத்தில் அவனுடன் பேச்சு கொடுத்து பார்த்தால் என்ன என்று ஏனோ எனக்கு தோன்றும். அவனை நோக்கி சிறு புன்னகைப்பேன். அவன் ஒருமுறை பார்ப்பான் படாரென்று பார்க்க கூடாததை பார்த்த மாதிரி முகத்தை அங்கால் தூக்கி விடுவான்.இப்படி பல முறைகளாக பல காலங்களாக.

அங்கு மட்டுமெல்ல நகரத்தின் பெருந்தெரு கரையோரங்களில் கூட அவன் தனித்து மட்டுமன்றி அவனை போல உள்ள கூட்டத்தோருடையும் சேர்ந்து இருக்க காணுவதுண்டு. ஒரு நாள் இப்படியே நான் நகர்ந்து கொண்டிருக்கும் போது நகரின் மையப் பகுதியே என உணர்வின்றி, எந்த வித சலனமின்றி அங்கு கிடைத்த யாரோ ஒருவளுடன் சல்லாபித்து கொண்டிருந்தான்.அத்தெருவினூடக சனங்கள் போகின்றார்களே வருகிறார்களே என்ற எந்த வித பிரகஞை இன்றி .அவனும் அவளும் அவர்களின் வேற உலகத்தில் .சொர்க்கத்தை கண்டு கொண்டிருந்தார்களோ என்னவோ.

தீடிரென்று ஒரு சத்தம் எங்கையோ வந்த கார் சாரதி ஏதோ நினைவில் பின் றிவர்ஸ் எடுக்கும் போது இவர்களது ஆனந்தமய நிலையை குழப்ப அங்கு ஒரு போர்க்களத்துக்கான நிலை எடுப்பு உருவாகி கொண்டிருந்தது.அங்கு வெற்றி தோல்வியை தராமால் அவ்விடத்தில் இரத்த வெள்ளத்தை தந்து கொண்டிருந்தது..

அந்த சம்பவத்தின் பின் அதன் காரணமான சாட்சி சம்பிரதாயத்துக்கு சென்றதன் காரணமாகத் தான் அவனுடன் ஆழமாக பழக ஏற்பட்டது.பேச்சு கொடுத்து பார்த்தேன் ,,பேச்சு கொடுத்து பேசி பழகுவது எல்லாருக்கும் இயல்பானது இலவகுவானது தானே என்று நினைத்திருந்தேன் அவனுடன் பழகும் மட்டும்.கேள்வி பதிலில் இன்னொமொரு தேவையற்ற கேள்விக்கு இடமின்றி அவனின் பதில் இருக்கும் ..அப்படி பல

அவன் ஒரு phd முடித்த கல்வியாளன் அவனுடனான உரையாடலிருந்து பெறும் தகவல்களில் இருந்து கண்டு கொண்டேன்.அந்த படிப்பை அந்த பட்டத்தை அலட்சியமாக அநாயசமாக வெறுப்பதாக கூறினான்..சராசரிகளின் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறக இருந்தது அவனது எதிர்பார்ப்பு .சீ எந்த வித எதிர்ப்பார்ப்பே இல்லாத ஒருவனாய் இருந்தானே.அவனது நாடோடி தன்மை அவன் அனுபவிக்கும் சுதந்திர காற்று என்னிடமில்லையே என்ற வேதனை பொறாமை எல்லாம் அவனை காணப்போகும் போதெல்லாம் எனக்கு ஏற்படும்.நாங்கள் எல்லாம் காற்றடித்த யாரோ ஒருவருடைய விருப்பு வெறுப்புக்கு ஏற்ப நடந்து கொண்டு இருக்கும், றீமோட்டோல் இயக்கும் பொம்மைகளாக தோன்றும் அப்போது.

காலம்களும் சும்மா இல்லை இயந்திரகதியில் நகர்ந்து கொண்டிருந்தது ..நான் அடிக்கடி சந்திக்கும நபர்களை கால இடவெளியில் காண நேரிடும் சந்தர்ப்பம் ஏற்படும். அவர்களிடம் இருந்து இளமையிலிருந்து இடம் மாறிய முதுமை தோற்றம் எனனுள் வந்ததை அப்ப தான் எனக்கு வந்து நினைவுறுத்தும் .இந்த இடைபட்ட காலங்களில் இவனை தேடி கண்கள் நான் போகும் இடம் எல்லாம் அலையும் ஆனால் .கண்ணில் படவில்லை .அவன்.எங்களைப் போல் அக்கம் பக்கம் கொஞ்ச நகராமால் அபாயத்தை துளியும் நேரிடயாக சந்திக்க துணிவில்லாமால் நேர்கோட்டில் வாழுபவனா .அவன்? .எங்காவது சென்று இருப்பான் என்று நினைத்தாலும் அவன் நினைவு என் மனதில் இருந்து கொண்டு தான் இருந்தது.

அவன் தூங்கி கொண்டு இருக்கிறான் என்றல்லா நினைத்து விட்டேன் ,ஏது நடந்து விட்டது .அவனை சுற்றி நிற்க்கும் பொலிஸ் உடை அம்புலன்ஸ் உடை தரித்தவர்கள் பரபரப்படன் இயங்கி கொண்டிருப்பதை பார்க்கும் போது செத்து கொண்டிருக்கிறானா செத்துவிட்டானா..என்ற ஏக்கம் என்னுள்.

அங்கு அவனை தூக்கி செல்கிறார்கள் .பார்க்க முடியவில்லை பரபரப்பாக செல்லும் கூட்டம் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது.வாழ்வதாக நினைத்து கொண்டு சடமாக வாழும் இந்த கூட்டம் வாழ்வையும் சாவையும் ஒன்றாய் நினைத்து வாழும் போதே வாழ்ந்து விட்டு செத்தவனை பார்க்க என்னமாய் அங்காலாய்க்கிறது என்று ஆத்திரமாய் வந்தது எனக்கு.

எல்லா பக்கம் செல்லும் நிலக்கீழ் ரயில்களுக்கும் ஒரே நேரத்தில் காச்சல் பீச்சல் ஏற்பட்டு விட்டதோ என்னவோ தெரியவில்லை.வழமையாக இதே நேரத்தில் பரபரப்பாக அசைந்து கொண்டு இருக்கும் கூட்டம் அசைவிற்று சிதறி நிற்பது போல தென்பட்டது ..இந்த இடையில் நிற்பவர்களின் வம்பு பேச்சை கேட்டு பார்க்கவேண்டும். கேட்டு பாருங்களேன் ஒரு ஆராய்ச்சியே செய்து முடித்திருப்பார்கள்.

இவர்களால் நகரின் அழகே கெடுது என்று பக்கத்தில் நின்ற மற்ற ஒருவனிடம் கூறிக்கொண்டு நின்றது . பார்க்க சகிக்காத கடுமையான மூஞ்சியை முகத்தில் ஒட்டியிருந்தது போல இருந்த கோட்டு சூட்டு போட்ட அழகற்ற கபோதி ஒன்று.

அதற்கு தலை ஆட்டி விட்டு தொடங்கியது மற்றவன். அதை போல இருந்த இன்னொன்று .அந்த ஆட்டத்துக்கு அர்த்தம் ஒம் என்றுதா இல்லை என்றதா கொள்ள முடியமால் இருந்தது
.

இவையளை ஒழுங்கு படுத்தி ஒரு வீட்டு வசதி செய்தாலும் அதுகள் திரும்ப வந்து றோட்டுக்கு வந்து படுக்குதுகள். அதுக்கு அரசாங்கம் என்ன செய்யிறது என்று தொட்ரந்து கொண்டு இருந்தார்.

அவன் இறந்து விட்டான் .அடுத்த நாள் பப்பராசி பத்திரிகையில் அவனது படத்துடன் முகப்பு செய்தியாக வந்ததது பெரிதாக ஆச்சரியமாக படவில்லை

அதை விட ஆச்சரியம் எனக்கு காத்திருந்தது. அவன் உண்மையில் பரம்பரை கோடிசுவரன் என்ற உண்மையை வெளியிட்டு இருந்தது தான் ..இனிமேல் அவனை பற்றி உண்மை பொய்யும் கலந்து வெளியிட்டு பல கதைகள் சொல்லும் வேலையை அவர்களே செய்வார்கள் என்று நினைத்து கொண்டு நிலசுரங்க ரயில் நிலைய படிக்கட்டுளூடகா அதே படபடப்புடன் அதே அவசரத்துடன் சென்று கொண்டு இருக்கிறேன்

இப்பொழுது அந்த இடத்தில் அந்த பிளாட்பார தூணுக்கு கீழ் வேறு ஒரு வீடு அற்றவன் படுத்து கொண்டு இருக்கிறான்

Thursday, May 17, 2012

மிதுவின் (மே மாத -2012) சிறுகதைகள்



வகுப்பறை 11B(சிறுகதை)


எவ்வளவு தூரம் நடந்தானோ அவனுக்கே தெரியவில்லை .கால்கள் தளர்ந்து எங்காயினும் குந்துவமோ என்று மனம் தத்தளிக்கும் பொழுது தான் அவ்வளவு தூரம் நடந்திருக்கிறமே என்று தெரிய வந்தது .இந்த வெய்யிலில் இப்படி நடந்து திரிவது முட்டாள்தனமான பலப் பரீட்சை என இன்னும் நினைக்கவில்லை தானே என்று அப்பொழுது திருப்தி பட்டுக் கொண்டான். .நாட்டை விட்டு ஓடி எவ்வளவு காலத்துக்கு பிறகு திரும்பி வந்து ஒரு சாரமும் சேட்டுடன் காசுவலாக மூன்று மைல் நீளப்பாட்டுக்கும் நாலு மைல் அகலப்பாட்டுக்கும் கால் போன போக்கில் பைத்தியக்காரன் போல் நடந்து திரிகிறான், அப்படி ஒரு ஆசை இருந்தது அதில் ஒரு சந்தோசம் இருக்கும் என நினைத்து அப்படியே நடந்தாலும் இன்னும் ஒரு தெரிந்தவன் படித்தவன் கூட அவன் கண்ணில் தென் படவில்லை ..அட எல்லாரும் ஒட்டு மொத்தமாக தன்னைப் போல வெளியிலை ஓடி தொலைந்திட்டாங்களாக்கும் என்று நினைத்து கொண்டு அந்த கோயில் வாசலின் உள்ள தூணுக்கருகில் அப்பாடா என்ற குரலுடன் வந்த நீண்ட மூச்சை வெளியில் விட்ட படி காலாற குந்தினான். .


 

கோயிலில் யாரும் இல்லை .அப்பிடி ஒரு தனிமை அங்கு அப்பப்ப இடைக்கடை எங்கிருந்தோ வாற .இதமான காற்று வந்து அவனை தழுவி செல்ல அப்படியே அந்த வாறந்தாவில் புரண்டு படுத்தால் என்ன சந்தோசமாக இருக்கும் என்று ஒருமுறை நினைத்து பார்த்தானே ஒழிய அப்படி செய்ய அவனால் முடியவில்லை.என்னதான் காசுவலாக உள்ளுர் வாசி போல வேசம் போட்டாலும் உள் மனம் வெளிநாட்டு வாசியாகவே போலி கெளவரத்துடன் உருவமைப்பதை நினைத்து வெட்க பட்டு கொண்டான்.

 

 

அவனது தனிமையை மட்டுமல்ல அங்கு மூலஸ்தான மூடிய அறையில் அம்மனோ காளியோ கல்லாக இருக்கும் அவளின் தனிமை கூட குலைந்தது. தரிசனம் என்ற போர்வையிலும் பூஜைக்கான ஆயத்தம் என்ற போர்வையிலும் வந்தவர்களின் பிரச்சன்த்தால் .அவற்றில் அங்கு பூஜை செய்ய வந்த ஜயரும் ஒருவர் .பூஜைக்கான ஆயத்தங்கள் செய்வதில் அக்கறை, படபடப்பு அவரின் முகத்திலும் அசைவிலும் தெரிகிறது .காலம் காலமாக உந்த கடவுள்களுக்கு அலங்கரித்து ஆலாவனம் பண்ணி பூஜை புனகாரம் எல்லாம் செய்து அங்கிருந்து இங்கு சக்தி பெற்று கொடுக்க முனையும் சராசரி பூசாரி போல ஒருவர் தான் இவரும் என்று மேலோட்டமாக பார்க்கும் பொழுது கூட அவனுக்கு எழவில்லை ...எங்கையோ.. எங்கோ .. அருகில்.. மிக அருகில் இன்னும் எனது உணர்வுகளை பகிர்ந்த ஒருவர் தான் உறுதி செய்தாலும் முழு விவரங்களை தேடி மூளை வெகு வேகமாக இயங்கி கொண்டிருந்தது.அட மையிக் சுந்தரம் அவரா ...நீங்கள் என்று சொல்லாமால் அவனா நீ அவனை அறியாமால் வாய் உளறியது ,என்னமாய் மாறி விட்டான் அதை விட ஜயன் என்று இவ்வளவு காலமும்தெரியாதே என்ற ஆச்சரியுமும் மேலோங்கியது
.

 

 

.உந்த கல்லுக்கு இனிமேல் செய்ய போகும் அலங்காரத்தை ஏற்கனவே அவன் தனக்கும் செய்து தன் மேல் மற்றவர்களுக்கு பக்தியும் பரவசமும் வரும் கோலத்தில் நிற்கிறான். என்னதான் ஓரே வகுப்பில் பக்கத்து வாங்கில் இருந்து படித்தவன் என்றாலும் நீ ..அவன் என்று கூப்பிட்டால் என்ன நினைப்பார்கள் என்று மட்டுமின்றி அதுக்கு மேலும் எதுவும் நடந்து விட்டால் என்று அஞ்சி அவருக்கு அருகில் சென்று ஜயா என்னை ஞாபகமிருக்கிறதா என்று ஒரு வாஞ்சையுடன் ஆவலுடன் கேட்டான் ...

 

 


கண் மட்டத்தில் கை மட்டத்தை வைத்து அவனது உருவத்தை குளோசப்பில் கொண்டு வந்து கூட அவனை அவர் யார் என்று தெரிந்து கொள்ளாமால் தவித்தார் .காலம் என்ற வில்லன் தொடர்ந்து ஞாபக நினைவுகளை தொடர்ந்து கடத்தாமால் தவிர்ப்பதற்க்காக ஒரு துணிந்த கதாநாயகனாக விரைந்து ..அட மையிக் சுந்தரம் நான் தான் டா ,,,என்று தொடங்கி பள்ளிக்கால நினைவுகளை சொல்லி ஞாபக படுத்துவது மட்டுமில்லை ...வகுப்பறை நினைவுகளான மற்றவர்களுடைய டிபன் பொக்சில் இருந்து முட்டை பொரியல் திருடி சாப்பிட்டதில் தொடங்கி ,,,அவன் அந்த சிறிய வயதில் செய்த ஹிப்னொடிசம் சாகசங்கள் பலவற்றை சொல்லி பள்ளிக் கால உருவத்தை கொண்டு வந்த மறு கணமே ,தனது ஜயர் வேசத்தை கூட மறந்து அவனை இறுக அணைத்து கொண்டார். அங்கு அவர்கள் காதலாகி கசிந்து கண்ணீர் உருகும் காட்சியை ,,அங்கு அம்மன் தரிசனம் பெற வந்தவர்களுக்கு வழங்கி கொண்டிருந்தனர்.

 

 


தூரத்தில் தெரிகிற அந்த கடலின் அலை சத்தத்தையும் மீறி உங்களுக்கு ஓரே அலை வரிசையில் ஒரு சத்தம் கேட்டு கொண்டிந்தால் அது தான் அந்த பள்ளிக்கூடம். காலனித்துவ கல்வியாளனோ நிறுவனமோ அல்லது மதம் மாற்றி வலை பிடிக்க வந்த கூட்டமோ யாரோஅந்த பள்ளிக்கூடத்தை நிறுவியதானால் என்னவோ அந்த தன்மைகளில் சிறிதும் நழுவ முயற்சி செய்யமால் இன்று வரை அவற்றை அடியொற்றி நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறது.,அதில் ஒரு தற்பெருமை அதுக்கு.இந்த பள்ளியின் அருமை பெருமைகளை சொல்ல தேவை இல்லை அந்த நூற்றாண்டு கால பெருமையை அப்பள்ளி வாசலுக்குள் காலடி வைக்காதவன் கூட கதை கதையாக கூறுவான் .ஏதோ தட்டு தடுமாறி இந்த மையிக் சுந்தரத்துக்கும் அவனுக்கும் கூட இந்த பள்ளிகூடத்திற்க்குள் காலடி வைக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.அதனால் அந்த பள்ளிக்கு பெருமை சேர்த்தார்களோ பள்ளியால் இவர்கள் பெருமை பட்டாரகளோ என்று சொல்லுவதற்க்கு ஒன்றுமில்லை ,சொல்ல முனைந்தாலும் பெரிய சுவராசியமாக ஒன்றும் இருக்காது .நிச்சயம் சுவராசியமாக ஏதும் சொல்லலாம்.பான பட அந்த றோட்டை பார்த்தபடி இருக்கிற கட்டிடத்தின் அந்த பழமையான மரத்துக்கு அண்மையில் ஒரு வகுப்பு நடந்து கொண்டிருக்கிறதே கொஞ்ச கால மாக அதை 11B என்று சொல்லி கொண்டிருக்கிறார்களே அதை பற்றி.

 

 

 

அந்த வகுப்புக்கு கெமிஸ்ட்டிறி மாஸ்டர் வருவார் பிசிக்ஸ் மாஸ்டர் வருவார் அப்படி அதில் பொட்னி டீச்சரும் வருவார் ..பாடம் நடக்கும் ..நாளைய டொக்டர்களும் என்ஜீனியர்களும் முன் வருசையை பிடித்து வைத்துருப்பார்கள் தெரிந்த விடயம் தானே ...முன் வரிசை இருந்தால் பின் வரிசை இருக்கும் தானே ..அதில் தான் நம்ம மையிக் சுந்தரமும் அவனும் இருப்பார்கள் என்று சொல்லாமால் உங்களுக்கு தெரிந்திருக்கும் .அதை மீறி ஒருவன் 16 வயதில் வயதுக்கு மீறிய பரம் பொருள் ரகசியத்தை சொல்வது மாதிரிஅங்கிருந்தவர்களுக்கு எப்பவும் ஏதேனும் சொல்லிக்கொண்டிருப்பான். ..அதில் எல்லாம் சினிமா இருக்கும் இலக்கியம் இருக்கும் கவிதை இருக்கும் காதல் இருக்கும் களவியல் இருக்கும் ,எல்லாம் பாடம் நடந்து கொண்டிருக்கும் மாறிக்கொண்டிருக்கும் இடைவெளியில் தான் என்றது தான் ஆச்சரியமான விடயம் .முன் வரிசை மாணவர்களுக்கு இவன் சொல்வது விளங்காது .தங்களுக்கு மட்டுமே என விளங்க முடியும் என நினைத்து கொண்டிருக்கின்ற தாவரவியல் சூத்திரங்களிலும் பாரக்க ஏதோ விளங்காத ஒன்றை சொல்லுகிறான் என்று அதிசையத்தாலும் தேவை இல்லாத விடயம் என்று தான் அலட்சியமாக பார்ப்பார்கள்.

 

 

 

இதை விட நடுவரிசை மாணவர்கள் ஒன்று இருக்கிறார்கள் தெரியுமா ..தெரியாவிட்டால் தெரிந்து கொள்ளுங்கள் ..அவர்கள் படிப்பிலும் கண்ணு இப்பிடியான விடயங்களிலும் ஒருஈர்ப்பு.இருக்கும்.அப்படி ஒருவன் தான் ராகவன் ..கிளுகிளுப்பாக நயம் பட இந்த விடயங்களை சொல்லும் பொழுது காதை பின்னுக்கு நீட்ட தவறுவதில்லை... ஒரு கட்டாக்காலி மாடு அசை போட்டு நடந்து கொண்டிருக்கும் அதன் பின் நடுத்தர பெண் ஒருத்தி வாழ்க்கை சுமையின் வலிகள் முகத்தில் தெறிக்க அந்த றோட்டில் கடந்து கொண்டிருப்பாள் ,,,பாடம் எவ்வளவு மும்முரமாக நடந்து கொண்டிருந்தாலும் அங்கு தான் எல்லார் கண்ணும் போகும் இதில் முன் வரிசை பின்வரிசை பேதம் இல்லாமால் ..என்ன தான் இருந்தாலும் அவனின் கருத்துகளை ரசித்து கேட்டாலும் ,அவனது குரு பக்தி ...ஆசிரியர்களை மதிக்காமால் இவர்கள் நடந்து கொள்வது துப்புரவாக பிடிப்பதில்லை ..மனதில் எத்தனை நாள் திட்டி இருப்பான் ...ஆசிரியர்களும் இவர்களை கண்டு கொள்ளுவதில்லை ...மனத்தளவில் இவர்களை ஒதுக்கியே வைத்து இருக்கிறார்கள் ...யார் கண்டார்கள் இவர்களில் நாளைய காலத்தின் பிரபல எழுத்தாளனும் இருக்கலாம் அல்லது பிரபல அரசியல் கட்சியின் தலைவனும் இருக்கலாம் ..இதை எல்லாம் ராகவன் யோசித்து பார்க்கவில்லை

 

 


..பொட்னி பாடத்திலும் பார்க்க பொட்னி வகுப்பு பிடிக்கும் ராகவனுக்கு .ஆனால் பலருக்கு பொட்னி பாடத்திலும் பார்க்க பொட்னி டீச்சரை பிடிப்பதில்லை ...இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமால் இருக்கிறதே என்ற தாழ்வு மனப்பான்மையால் பாடம் நடத்தும் நேரத்தில் ஒரு நிமிடத்தில் எத்தனை தரம் சீலை இழுத்து இழுத்து மூடிகொண்டே இருப்பா என்று சொல்ல முடியாது அப்படி அவ்வளவு தரம் இருக்கும் . ...சில வேளை அக்கறையோடு உற்று நோக்கி படிப்பவர்களுக்கு இது பற்றி ஒன்றும் தெரியமால் இருக்கலாம்.அதை பார்க்க ரஜனி செய்யும் மெனரிசம் ஒன்று போல இருக்கும்

 

 

 

நம்ம இலக்கியவாதி இருக்கிறானே ....சிலவேளை பாடம் நடக்கும் பொழுது கண்ணை முழித்து கொண்டே கனவு காண்பான் ..அப்படித்தான் முழித்து கொண்டு தனது கற்பனை பெண்ணை வைத்து கவிதை வடித்து கொண்டிருந்தானோ அல்லது எப்போதோ வாசித்த மோக முள் நாவலின் வசனங்களை இரை மீட்டு கொண்டிருந்தானோ தெரியாது ...நடந்த கொண்டிருந்த தாவரவியல் பாடத்தின் சிலபஸ் தீடிரென்று மாறியது ...பொட்னி டீச்சர்..சரமாரியாக இவனை நோக்கி ...தாக்குதல் கணைகளை வீசி கொண்டிருந்தா..குரு என்ற மதிப்பில்லை என்று ...தொடர்ந்து கொண்டிருந்தது ...தீடிரென்று நனவு உலகத்துக்கு வந்த அவனுக்கும் விளங்கவில்லை ...அந்த வகுப்பில் உள்ளவர்கள் எவருக்கும் விளங்கவில்லை..டீச்சருக்கு மட்டும் அப்படி விளங்கி இருக்கிறது தன்னை உற்று பார்த்து தன்னை சைட் அடிக்கிறான் என்று ...டீச்சரில் பார்க்க ராகவனுக்கு தான் கோபம் அதிகம் இவன் குருவுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்று ...

 

 


தீடிரென்று ஏதோ காரணத்தினால் அவசர ஆசிரியர் கூட்டத்துக்கு அதிபர் அழைப்பு விட்டு இருந்தார்.எப்பொழுது வகுப்பு முடியும் என்று காத்திருந்த மாணவர்களுக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கேட்கவா வேண்டும்.எல்லா வகுப்பிலும் கும்மாளம்

 

 


அப்படித்தான் 11B யிலும்

 

 


இந்த மையிக் சுந்தரத்தை பார்த்து இந்த இலக்கியவாதி.உசுப்பேத்தினான்..

 

 


என்னடா ஹிப்னாடிசியம் தெரியும் என்று சொல்லுறீயே ..செய்து காட்டு பார்ப்பம் என்று

 

 


யாராவது சம்மதித்தால் செய்து காட்டுறன் என்று கூறினான் சுந்தரம் கொலரை இழுத்து கொண்டு

 

 



யாருமே சம்மதிக்கவில்லை ...வீம்பு காட்டி கதைக்கும் இலக்கியவாதி முதற்க்கொண்டு

 

 

அறியும் ஆவலோ என்னவோ ராகவன் இதற்க்கு சம்மதித்தான்

 

 

உண்மையில் மையிக் சுந்தரம் திறமை சாலி தான் ..ஆழ்ந்த ஹிப்னாடிச தூக்கத்தில் ராகவன்

 

 

பல கேள்விகளை ..கேட்டு கொண்டிருந்தான் சுந்தரம் ஆழ்நிலையில் வைத்து க்கொண்டு

 

 

பதில்களை சரியாக சொல்லி கொண்டிருக்கிறான் ..பள்ளியில் முதல் சேர்ந்த முதல் திகதி கொண்டு

 

 

-------

 

 

------

 

 

-------

 

 

------

 

 

யாரோடு படுத்திருக்கிறாயா இவ்வளவு காலத்தில் ?

 

 

இல்லை என்று அனுங்கிய குரலில் பதில் வந்தது

 

 

யாராயாவது காதலித்து இருக்கிறாயா என்று கேள்விக்கு

 

 

ஓம் என்றான்

 

 

யாரை என்றதுக்கு

 

 

பொட்னி டீச்சரை என்று மகிழ்ச்சியுடன் பதில் வந்தது

 

 

அடுத்த பாடமும் பொட்னி பாடம் தான். இன்றைக்கு டபிள் பீரியட் எல்லோ

 

 

அப்ப வகுப்பறை 11B எப்படி இருக்கும் ஒன்று கட்டாயம் அவதானியுங்கோ ஒருக்கா ..என்ன?

 

 

(யாவும் கற்பனை)

 

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 



சுருங்கிய தோலின் சுருங்காத எண்ணங்கள்(சிறுகதை)
என்னடா பயல் இப்படி கதை விட்டுட்டு போறானே என்ற பாவனையில்..அங்கு கூடி நின்றவர்கள் ஒருதரை ஒருத்தர் பார்த்து கொண்டனர் .இப்படித்தான் பத்து பேர் வருவான் பத்து கதை சொல்லுவான் இதெயல்லாம் நம்பி கொண்டு இருக்க முடியுமா ..அண்டைக்கொரு நாள் பாருங்க ....இப்படித்தான் ஒருவன் வந்து ....என்று கொண்டு ...அங்கு சிறிது நேரம் நீடித்த இனம் தெரியாத அமைதியை இல்லாமால் ஆக்கி கொண்டு அங்கு சப்ளை செய்து கொண்டிருந்த ஒருவன் பேச்சை தொடங்க கல்லா பட்டையில் இருந்து ஒருவன் குரல் கொடுத்தான் கதையை விட்டுட்டு கஸ்டமரை கவனியடா என்று .

 


.இப்படி வாறவர் போறவர் கதைக்கறவர் சிரிக்கிறவர் கேலி செய்கிறவர் சாப்பிடுறவர் குடிக்கிறவர் பத்திரிகை பார்க்க வருகிறவர் வெட்டி கதை அழப்பவர் எல்லாரோயும் வேடிக்கை பார்த்து பொழுது போக்கி கொண்டிருக்கவே ஒரு கூட்டம் எப்பவும் அந்த கோப்பிக் கடையில் இருக்கும். .அவர்களுக்கு என்று அந்த கடையில் உள்ள மூலையில் உள்ள கதிரை மேசைகளை உத்தியோக பூர்வமகா வழங்கபட்டிருக்காவிடினும் அதை தங்களுக்கென்று நிரந்தரமாக்கி வைத்திருப்பர் .அந்த இளைஞர் முதியவர் என்ற வேறுபாடின்றி இருக்கும் வெட்டி கூட்டத்தில் இருந்து கொண்டு மணியத்தார் வழமை போல எல்லவாற்றை கவனித்து கொண்டிருந்தார் .அந்த கோப்பிக்கடையின் வியாபாரத்தின் நாடி ஓட்டத்தை பொறுத்து இவர்களின் கூச்சலும் கும்மாளம் கூடி குறைந்து இருக்கும் ...அந்த கூட்டத்தில் ஒருவராக அதிகம் நேரம் அங்கு பிரச்சனமாயிருந்தாலும் அதிகம் கதைக்க மாட்டார்.

 

 


...கதைத்தாலும் ஒரிரு வார்த்தைகள் தான் கதைப்பார் அதுவும் தங்களுடைய கூட்டதுக்கு தான் அதுவும் இதை மட்டும் தான் கூறி கொண்டே இருப்பார் ..இது ஊர் தேத்தணி கடைக்கு முன்னாலுள்ள பெஞ்ச் இல்லையடாப்பா.. இது லண்டன் ..அவன்ரை வியாபாரத்தை பழுதாக்கமால் எங்கட அலுவலை பார்க்கோணும் ..

 


.பெரிசு ....சும்மா கிட பேச மாட்டாய் ..பேசினால் எப்பவும் இதைத் தான் கீறல் றைக்கோட் பிளேயர் மாதிரித் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாய் ,,,,ஓனரே ,,பேசாமால் இருக்கிறான் ...அவனுக்கு நாங்கள் இருப்பதனால் வருவாயோ என்னவோ இதையே பதிலாக எப்பவும் சொல்லும் நெட்டையனுக்கும் அங்கு வந்த கஸ்டமருக்கும் தேவையில்லாத கதை தொடங்கி எங்கையோ முடிந்து பெரிய சண்டை வராமால் தடுப்பதே பெரும் பாடய் போய் விட்டது ஓனருக்கு ..

 

 

 

.அது தான் வேலையாளி மேல் காட்டுறார் என்று நினைத்த மணியத்தார் .அங்கு இருக்க பிடிக்காமல்.தனது மூன்றாம் காலான வாக்கிங் ஸ்ரிக்கையும் எடுத்து ஊன்றி க்கொண்டு மெல்ல மெல்ல வெளியே வந்தார். இவ்வளவு தூரம் இங்கு வந்தும் அவர்கள் போடும் சத்தம் தமிழில் கேடபதை உணர்ந்தார். அவர்கள் கறுவல் கூறிய விடயத்தை தான் இப்ப கதைக்கிறார்கள் விளங்கியது ..வழமையாக அவருக்கு காது அவ்வளவு கேட்காது .ஆனால் அதைத் தான் அவர்கள் கதைக்கிறார்கள் தெளிவாக உணர்ந்ததை பற்றி அவர் ஆச்சரிய படவில்லை .ஏனெனில் அவரது கால்களும் வாக்கிங் ஸ்ரிக்கும் ஒவ்வொரு அடியாக வைத்தாலும் அவரது மனமும் அதை நினைத்து தான் திரும்ப திரும்ப அசை போட்டு கொண்டிருந்தது!

 

 

 

அவர் எழுபதுகளின் அந்தியை அவர் தொட்டாலும் அந்த காலம் பேசிய கொள்கையின் நம்பிக்கைகளை இன்னும் நம்பிறன் நடக்கிறன் என்று நினைக்கிறார். நடை முறையில் அப்படி இல்லை என்பது தான் உண்மை. .இதை எல்லாம் ஒரு விசயமாக பொருட்டாக கருதி இன்னும் அதனுடன் போராடுவது வெறுப்பை தட்டியது .அவன் சொன்ன விடயம் அவர் வழமையாக குறுக்கு பாதையாக கை கொள்ளுகிற அந்த பார்க்கில் தான் நடந்ததாம்.

 

 



வரும் பொழுது இருந்த ரம்மிய மான சூழ்நிலை இப்பொழுது அங்கு இல்லையென்றாலும் வீட்டை போய் என்ன வெட்டி விழுத்த போறனோ? மருமகளின் வெறும் குத்தல் பேச்சுக்களை கேட்டு மன நோகிறதிலும் பார்க்க இதில் கொஞ்சம்இருப்போமே என காலாற அந்த பெஞ்சில் அமர்ந்தார்

 

 


உதிர்ந்த மரங்களில் இலைகள் மெல்லிதாக மலர தொடங்கும் அறிகுறியை காட்டி கொண்டிருந்தன.தூரத்தில் இருந்த கல்லறையில் ஏதோ அசுமாத்தம் ...சுற்று முற்றும் பார்த்து இந்த சூழலோடு ஒன்றி தேவையற்ற சிந்தனையை ஓடாமால் இருப்பதுக்கு முயன்றாலும் மனக் குதிரை தேவையில்லாமால் பின்னோக்கி தான் சவாரி செய்து கொண்டிருந்தது.இளவேனில் காலத்தின் ஆரம்பம் என்ன குதுகாலம் சந்தோசம் சிறுவர்கள் அதை வரவேற்பது போல் விளையாடிக்கொண்டிருந்தார்கள் ..ஒரு இளம் ஜோடி தங்களை மறந்த ஒரு உலகத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்

 

 

.இவருக்கு முன்னால் உள்ள பெஞ்சிலுள்ள கிழவி ஒருத்தி தூரத்தில் தெரியும் கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருந்தாள் ..அவளுடைய நாயோ தெரியாது தூரத்தில் ஓடுவதும் அவளுடைய காலடியில் வருவதுமாக இருந்து கொண்டிருந்தது.அதுக்கு கூட என்ன குதூகலாம் ..வயோதிபம் வரக்கூடாது ...வர முன் போயிடணும் ..அவருடைய ஆத்தா ...அந்த காலம் என்னை நேர காலத்துக்கு கொண்டு போய் சேர்த்திடு நல்லூரானே என்று வேண்டுவது சும்மா புலூடாவில்லை உண்மை தான் என்று நினைத்தார் ..இந்த தனிமை இந்த வேதனையுடன் மரணத்துக்கு காத்திருப்பதை தவிர வேற ஒன்றும் தான் செய்து கொண்டிருக்கவில்லையே ....அந்த உதிர்ந்த மரம் கூட மீண்டும் துளிர்க்கின்றது ..எனது சுருங்கிய தோலுகள் அப்பொழுது இருந்த இளமையுடன் இனிமேல் வருமா என நினைத்து இயற்கையின் ஓர வஞ்சனை நினைத்து திட்டிக்கொண்டார்

 

 


என்றும் சம்பந்த மில்லாமால் தனது மன ஓட்டங்கள் ஒரு கோவை இல்லமால் அங்கு இங்கு ஒடுவது போல் இருந்தது .முன்னிருந்த கிழவி அவரை பார்த்து உற்று பார்த்தது போல் இருந்தது .புன்னகை செய்த மாதிரி இருந்தது ..இவரும் பதிலுக்கு புன்னகைக்க முற்பட தீடிரென்று காட்சி மாறி அந்த கிழவி கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருக்க அந்த நாய் அவளுடைய காலடிக்கு வருவதும் தூரத்தில் ஒடுவதுமாய் இருந்தது,தனது மன ஓட்டத்தில் பிழையா கிழவி தான் சும்மா தமாஸ் பண்ணுறாளா ..என்று தெரியாமால் தவித்தார்...

 

 

 

இந்த வயதில் அவள் செய்தால் என்ன செய்யாட்டி என்ன எனக்கு என்ன வரப் ப்போகுது என்று நினைத்து கொண்டிருக்கு பொழுது .அவள் மீண்டும் அவரை பார்த்த பொழுது அவளது அந்த கண்கள் மூக்கு அதரம் மேலுடம்பு இடுப்பு கால்கள் எல்லாம் முதுமை தோற்றத்தில் இருந்து இளமையாகி கொண்டிருந்தது ..இது என்ன சமிபாட்டு கோளாறா இப்படி தெரிவதுக்கு காரணம் அந்த கோப்பிக்கடை பலகாரமா ஒரு கணம் நினைக்கும் பொழுது ..அவள் இளமை த்தும்பிய சிரிப்புடன் அணுகி கொண்டிருந்தாள் .இவ்வளவு நேரமும் விளையாடிய நாய் ஒரு ஈனக்குரலில் குரைத்து கொண்டிருந்தது..தூரத்தில் தள்ளுவண்டிலில் சென்று கொண்டிருந்த குழந்தை இனம் புரியாத மழலை குரலில் வீறுட்டு சத்தம் போட்டு கொண்டிருந்தது ..அந்த கறுவல் இப்படி இதே மாதிரியான சம்பவம் நடந்ததை சொல்லத் தானே கேலியும் கிண்டலுமாக கதைத்தோமே என அந்த சந்தர்ப்பத்திலும் கூட நினைக்க தவறவில்லை ,,,அவள் அவரை இன்னும் கிட்ட நெருங்கி கொண்டிருந்தாள் .

 

 


.மூச்சு முட்டுவது மாதிரி இருந்தது மேல் தோள்ப்பட்டை வலிப்பது மாதிரி இருந்தது ..இதுவெல்லாம் அவளை பார்த்து பயந்து அவருக்கு ஏற் படவில்லை என இன்னும் நம்பினார் ..ஏனெனில் அவளை மாதிரியே அவரும் இளமையாக தோலும் உடம்பு மாறி கொண்டிருப்பது தென்பட்டது .அது உண்மை தானாக நிச்சயப்படுத்துவதற்க்காக தன்னையும் அவளையும் மாறி மாறி விரைவாக பார்த்து கொண்டிருந்தார் தவிப்புடன் பார்க்க பார்க்க..பார்வை மங்கி கொண்டு சென்றது...ஒன்றுமே அவருக்கு இப்ப தெரியவில்லை வெளிப்புற சத்தங்கள் குறைந்து கொண்டு போய் கொண்டிருந்தது..

 

 


இபுபொழுது வெளிப்புற சத்தங்கள் மெல்லமாக கேட்டு கொஞ்சம் கூடி கேட்டு ஒரு இரைச்சலாக கேட்டு கொண்டிருந்தது..மெல்ல கஸ்டப்பட்டு கண்ணை திறக்க முற்பட்டார் முழுமையாக திறக்க முடியவில்லையானாலும்.சுற்றுவர ஆம்பிலன்ஸ் உதவியாளர்கள் நிற்பதை கண்டார் ....அந்த கிழவி தான் தொலை பேசி செய்து ..உதவியதாக உதவியாளர்கள் கூற அவளுக்கு ஒரு நன்றி சொல்லுவோமோ என நினைத்து பார்க்கு பொழுது

 

 


அவள் இன்னும் கல்லறையை வெறுத்து பார்த்து கொண்டிருக்க கண்ட அவர் ..நடந்த சம்பவம் உண்மையா பொய்யா என இன்னும் தெளிவில்லாமால் தவித்தார்